நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி சாத்தியமில்லை: ப.சிதம்பரம்

நடப்பு நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி என்பது அடைய முடியாத கனவாகவே தோன்றுகிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-04 10:49 GMT

புதுடெல்லி.

நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;-

, '2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், ரிசர்வ் வங்கி அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

நான்கு காலாண்டுகளில் 16.2, 6.2, 4.1 மற்றும் 4.0 என்று வளர்ச்சி இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதன்படி ஆண்டு வளர்ச்சி சுமார் 7.5 சதவீதமாக இருக்கும். அதேவேளையில், நாம் முதல் காலாண்டை ரிசர்வ் வங்கி கணித்ததை விட குறைவாக அதாவது 13.5 சதவீதம் என துவங்கியிருக்கிறோம். அடுத்த மூன்று காலாண்டுகளில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? 2022-23-ல் இரட்டை இலக்க வளர்ச்சி என்பது அடைய முடியாத கனவாகவே தோன்றுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்