மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருப்பது ஏன்?பா.ஜனதாவுக்கு, துணை முதல்-மந்திரி கேள்வி

மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்காமல் இருப்பது ஏன்? என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-09-04 18:45 GMT

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேகதாது திட்டம்

காவிரி நீர் பிரச்சினைக்கு மேகதாது திட்டம் ஒன்றே தீர்வு. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து சில அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போராட்டம் நடத்துகின்றன. பா.ஜனதா உள்பட போராட்டம் நடத்துகிறவர்கள் மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரும்படி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டியது தானே.

மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்காமல் உள்ளது ஏன்?. கர்நாடக விவசாயிகளின் நலனை காக்க நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகம் தினமும் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீரை திறக்குமாறு கேட்டது. ஆனால் நாங்கள் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் தான் வழங்க முடியும் என்று கூறினோம். காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் வறட்சி

கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளின் நீர் இருப்பு குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எடுத்து கூறியுள்ளோம். கா்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலை குறித்து சம்பந்தப்பட்ட மந்திரி ஆய்வு நடத்தியுள்ளார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.பெங்களூரு:-

Tags:    

மேலும் செய்திகள்