பிரதமர் மோடி தன்னை ஓ.பி.சி.யாக அடையாளப்படுத்துவது ஏன்..? ராகுல் காந்தி கேள்வி

நாட்டில் ஏழைகள் என்ற ஒரேயொரு சாதி மட்டுமே இருப்பதாக பிரதமர் மோடி கூறி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

Update: 2023-11-04 23:43 GMT

கோப்புப்படம்

ஜக்தால்பூர்,

பழங்குடியினரை 'ஆதிவாசி' என்று குறிப்பிடாமல் 'வனவாசி' என்று குறிப்பிட்டு பழங்குடியினரை பாஜக அவமதிப்பதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதிவாசிகள்தான் நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் என்பதால் அவ்வாறு அழைத்தால் அவர்களின் நிலம், நீர், காடுகளை திரும்ப வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை சாடி வரும் பிரதமர் மோடி, நாட்டில் ஏழைகள் என்ற ஒரேயொரு சாதி மட்டுமே இருப்பதாக கூறி வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

இதுதொடர்பாக சத்தீஷ்காரின் ஜக்தால்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "ஏழைகள் மட்டுமே நாட்டின் ஒரேயொரு சாதி என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்டவர்கள் போன்ற சாதிகள் இருப்பது நமக்கு எல்லாம் தெரியும். நாட்டில் ஒரேயொரு சாதிதான் இருந்தால், பிரதமர் ஏன் தன்னை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓ.பி.சி) சேர்ந்தவர் என அடையாளப்படுத்துகிறார்?' என கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்