கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்? - அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

தவறான அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு கொடுத்த அடி இது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.;

Update: 2023-05-13 07:55 GMT

கோப்புப்படம் 

பெங்களூரு,

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 129 இடங்களிலும், பாஜக 68 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது;

தவறான அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு கொடுத்த அடி இது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் திரண்டு இங்கே வந்து தங்களின் பலத்தை காட்டினர். ஆனால் மக்கள் பாஜகவை தூக்கி எறிந்துவிட்டனர்.

கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார் என்பதை கட்சி மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூருவுக்கு வருகை தந்து தேர்வு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்