"குஜராத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார்" - ராகுல் காந்தி கேள்வி...!

குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-08-22 08:36 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

காந்தி, பட்டேல் வாழ்ந்த புனித பூமியான குஜராத்தில் கோடிக்கணக்கான ரூபாயில் போதை விஷயத்தை பரவச் செய்வது யார்.

பலமுறை போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும், துறைமுக உரிமையாளரிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?

குஜராத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது வரை ஏன் பிடிக்க முடியவில்லை.

போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு தருவது யார்?

பிரதமரே, எவ்வளவு காலம் அமைதி காக்கப் போகிறீர்கள் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்