பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

கொப்பா அருகே, பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.;

Update: 2022-08-24 15:03 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா சாந்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரத்னா. இவருக்கு திருமணமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ரத்னாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தினர், ஜெயப்புரா அரசு ஆஸ்பத்திரி ஆம்புலன்சை வரவழைத்து ரத்னாவை மீட்டு பிரசவத்திற்காக அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் டிரைவர், ஒரு செவிலியர் மற்றும் குடும்பத்தினர் சிலர் ரத்னாவை அழைத்து சென்றனர்.

ஜெயப்புரா அருகே சென்றபோது ரத்னாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்திவிட்டு செவிலியர் ரக்சித், ரத்னாவுக்கு அவரது குடும்பத்தினர் உதவியுடன் பிரசவம் பார்த்தார்.

அப்போது சுகபிரசவத்தில் ரத்னாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் ஜெயப்புரா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்