நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது... புதிய நாடாளுமன்ற கட்டிடம் பற்றி குலாம் நபி ஆசாத் பேட்டி

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது நல்லது என கூறியுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி குலாம் நபி ஆசாத், அந்த யோசனை நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது தோன்றியது என பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2023-05-24 15:10 GMT

ஜம்மு,

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதுபற்றி, மக்களவை செயலகம் வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அழைப்பிதழில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றது. இந்த நிகழ்ச்சி வருகிற மே 28-ந்தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது சிவராஜ் பாட்டீல் சபாநாயகராகவும், நான் நாடாளுமன்ற விவகார மந்திரியாகவும் இருந்தோம்.

அப்போது சிவராஜ் ஜி என்னிடம் கூறும்போது, ஒரு புதிய மற்றும் பெரிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்ட வேண்டும் என கூறினார்.

ஒரு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானம் என்பது தேவையான ஒன்று. அது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது நல்லது என கூறியுள்ளார். எனினும், கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வது அல்லது புறக்கணிப்பது என்பது நாடாளுமன்றவாதிகளின் முடிவு ஆகும்.

ஏன் புறக்கணிக்கிறார்கள்? என்பது பற்றிய காரணங்களை அவர்களே விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தொடக்க நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள் அல்லது புறக்கணிப்பார்கள் என்பது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்