இந்தியாவுக்கு பயங்கரவாத தாக்குதல்களை கொடுத்தவர்கள் நிலை என்ன... பாகிஸ்தானை தாக்கி பேசிய பிரதமர் மோடி

பயங்கரவாதத்தில் இருந்து வர கூடிய வலியை இந்த புதிய இந்தியா சகித்து கொள்ளாது. அதற்கு பதிலாக ஒரு தக்க பாடம் புகட்டி வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Update: 2024-03-20 18:59 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த எழுச்சி பெறும் பாரத உச்சி மாநாடு 2024 என்ற தனியார் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, பயங்கரவாதங்களை பாதுகாப்பவர்கள் அல்லது வளர்ச்சி மற்றும் அமைதியை விரும்பும் நாடுகள் என அனைவரும் எழுச்சி பெறும் பாரதம் பற்றி உணர்ந்திருக்கின்றனர்.

பயங்கரவாதத்தில் இருந்து வர கூடிய வலியை இந்த புதிய இந்தியா சகித்து கொள்ளாது. ஆனால், அதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு ஒரு தக்க பாடம் புகட்டி வருகிறது.

இந்தியாவுக்கு பயங்கரவாத தாக்குதல்களை கொடுத்தவர்கள் நிலை என்ன என கேட்ட அவர், நாட்டின் குடிமக்களுடன், உலக நாடுகளும் பார்த்து கொண்டிருக்கின்றன என பேசியுள்ளார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமான படை சார்பில், 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி பாலகோட் விமான தாக்குதல்களை நடத்திய விசயங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பாகிஸ்தான் நாடானது, அதிகரித்து வரும் பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, கடன் சுமை மற்றும் எரிபொருள் விலை உயர்வு என பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால் சிக்கி திணறி வருகிறது.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் ஒன்றையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். 3-வது பதவி காலத்தில் முதல் 100 நாட்களுக்கான திட்டங்களையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராகவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர் என்றும் அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்