பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்தால் பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? - மம்தா பானர்ஜி கேள்வி

பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்தால் பாஜக அரசு இழப்பீடு வழங்குமா? என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update:2023-02-13 20:46 IST

கொல்கத்தா,

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கு பதில் பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவோம் என்று மத்திய கால்நடை பராமரிப்பு துறை அறிவித்து உள்ளது.

இந்த அறிவிப்பு இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பலவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை அடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வைக்கப்பட்ட இந்த கோரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பேனர்ஜி கூறியதாவது:-

பிப்ரவரி 14ஆம் தேதியை பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜக அரசு இழப்பீடு வழங்குமா?. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அராஜக அரசை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் அரசாங்கத்தை நிறுவ வேண்டும்.

இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது எனவும், எல்லை பகுதிகளில் சிலர் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும், அதனால், எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர் எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்