நான் எதை பற்றியும் கவலைப்பட போவதில்லை- முதல் மந்திரி விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகள் சித்தராமையாவே முதல்-மந்திரியாக இருப்பார் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2023-05-23 14:32 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகள் சித்தராமையாவே முதல்-மந்திரியாக இருப்பார் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறி இருப்பது குறித்து பெங்களூருவில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-

யார் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதுபற்றி எல்லாம் நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் எதை பற்றியும் கவலைப்பட போவதும் இல்லை. பதவி உள்ளிட்ட மற்ற விவகாரங்களை பார்த்து கொள்ள காங்கிரஸ் மேலிடம் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் அவற்றை பார்த்து கொள்வார்கள். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவி பங்கீடு, அதுபற்றி காங்கிரஸ் தலைமை எந்த ஆலோசனையும் நடத்தவில்லையா?, 5 ஆண்டுகள் முதல்-மந்தியாக சித்தராமையாவே இருப்பாரா? உள்ளிட்ட எந்த விதமான கேள்விகளுக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதில் எதுவும் சொல்லாமல் சென்று விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்