குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சினையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சினையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.;

Update: 2022-06-09 18:58 GMT

Image Courtacy: PTI

புதுடெல்லி,

நெல் உள்பட 17 வகை பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நேற்று முன்தினம் உயர்த்தியது. இந்தநிலையில், அதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:-

காரிப் பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு மீண்டும் ஒருமுறை மோடி அரசு துரோகம் செய்து விட்டது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு பதிலாக அவர்களின் வேதனையை நூறு மடங்கு அதிகரித்து விட்டது என்று அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்