துணை ஜனாதிபதியாக விருப்பம் தெரிவித்தேனா..நல்ல 'ஜோக்' - நிதிஷ் குமார் விளக்கம்

நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேன் என்று சுஷில் குமார் கூறியது நல்ல ஜோக் என்று நிதிஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2022-08-11 10:00 GMT

பாட்னா,

பீகார் முதல் மந்திரியும் , ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தனக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கப்படாததால் தான் கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக்கொண்டதாக பீகாரில் துணை முதல் மந்திரியாக இருந்த சுஷில் மோடி விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், " நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேன் என்று ஒருவர் (சுஷில் மோடி) கூறியுள்ளார். இது நல்ல காமெடி. எனக்கு அதுபோன்ற விருப்பம் எதுவும் கிடையாது. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாங்கள் எப்படி ஆதரவளித்தோம் என்று அவர்கள் மறந்து விட்டனரா? என்று கேள்வி எழுப்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்