மேற்கு வங்காளம்: மத்திய மந்திரிக்கு கருப்பு கொடி காட்டி, கற்களை வீசி கார் கண்ணாடி உடைப்பு

மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி நிசித் பிரமானிக்கிற்கு கருப்பு கொடி காட்டியதுடன், கற்களை வீசி அவரது கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-02-25 11:57 GMT



கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தில் கூச்பெஹார் நகரில் தின்ஹதா பகுதியில் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசுவதற்காக மத்திய உள்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கான இணை மந்திரி நிசித் பிரமானிக் இன்று சென்று உள்ளார்.

இந்நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதில், அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்கள் மந்திரியின் கார் மீது கற்களை வீசி உள்ளனர். இதில், அவரது காரின் முன்பக்க கண்ணாடி விரிசல் விட்டு உள்ளது. அவருக்கு எதிராக கருப்பு கொடியும் காட்டப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில் பா.ஜ.க. கொடி ஏந்திய ஆண்களும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் மற்றும் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியும் சென்றனர்.

இதனால், மந்திரி காரை விட்டு கீழே இறங்கி சென்று அவர்களை சமரசப்படுத்த முயன்றார். தாக்குதல் நடத்தியவர்களை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது என பிரமானிக் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்