ரூ.700-க்கு மகேந்திரா கார் வாங்கலாம் என நம்பிய சிறுவன் - ஆனந்த் மகேந்திரா அளித்த ருசிகர பதில்

மகேந்திரா தார் காரை 700 ரூபாய்க்கு வாங்கிவிடலாம் என்று சிறுவன் நம்பியுள்ளான். தனது தந்தையிடம் இதுகுறித்து சிறுவன் பேசும் வீடியோ வைரலானது.;

Update: 2023-12-25 03:27 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சிறுவன் சிக்கு, தனக்கு மகேந்திரா நிறுவனத்தின் தார் கார் வாங்கவேண்டுமென தந்தையிடம் கேட்டுள்ளார். தன்னிடம் உள்ள 700 ரூபாயை வைத்து மகேந்திராவின் தார் காரை வாங்க முடியும் என எண்ணிய சிறுவன் தந்தையிடம் கேட்டுள்ளார். மகன் கூறியதை தந்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா 700 ரூபாய்க்கு தார் கார் வாங்கிவிடலாம் என நினைத்து தந்தையிடம் பேசிய சிறுவனின் வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ருசிகர கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த் மகேந்திரா வெளியிட்ட பதிவில்,

எனது நண்பன் சோனி இந்த வீடியோவை எனக்கு அனுப்பினார். ஆகையால் அவரின் வீடியோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பார்த்தேன். எனக்கு சிக்குவை (சிறுவன்) பிடித்திருக்கிறது. ஒரேஒரு பிரச்சினை என்னவென்றால் சிக்கு கூறியதை நாங்கள் உறுதிபடுத்தி தார் காரை 700 ரூபாய்க்கு விற்றால், விரைவிலேயே நாங்கள் திவாலாகிவிடுவோம்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்