மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் பொறுப்பான அரசு உள்ளது. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை என துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.;

Update: 2023-05-29 16:09 GMT

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசின் உத்தரவாத வாக்குறுதி திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவோம். இந்த விஷயத்தில் அரசு உறுதி பூண்டுள்ளது. நிதித்துறை முதல்-மந்திரியிடம் உள்ளது. வருகிற 1-ந் தேதி மந்திரிசபை கூட்டம் நடக்கிறது. இதில் உத்தரவாத திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். சித்தராமையா நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய தகவல்களை மந்திரிசபையில் தெரிவிப்பார்.

நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். உத்தரவாத வாக்குறுதிகள் ஒரு முறைப்படி அமல்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகத்தில் பொறுப்பான அரசு உள்ளது. அதனால் யாரும் கவலைப்பட தேவை இல்லை. அனைத்து மந்திரிகளும் தங்களின் துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளோம். நான் இன்றே (நேற்று) எனது பணியை தொடங்குகிறேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்