நிலக்கரியை, காங்கிரஸ் சாம்பலாக்கியது; நாங்கள் வைரமாக்கியுள்ளோம்; நிர்மலா சீதாராமன்
முந்தைய ஆட்சியில் குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது என நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதார நிலை, பிரதமர் மோடி பதவி ஏற்றபின் இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று அவர் மக்களவையில் வெள்ளை அறிக்கை தொடர்பாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: நீங்கள் (காங்கிரஸ்) சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை நாங்கள் (பா.ஜ.க) வைரமாக்கியுள்ளோம். ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையில், இந்தியாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை. அதை எப்படி கையாள வேண்டும் என்று இப்போது பாடம் எடுக்கிறார்கள். காங்கிரஸ் அரசாங்கம் நேர்மையாக கையாண்டிருக்க வேண்டும். நாட்டின் நலனை பாதுகாக்க ஒன்றும் செய்யவில்லை" என்றார்.