ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு 3 பெண்களுடன் கள்ள உறவு வைத்துள்ளனர்; இந்து மதத்தினர் குறித்து எஐஎம்ஐஎம் தலைவர் சர்ச்சை பேச்சு

ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு 3 பெண்களுடன் கள்ள உறவு வைத்துள்ளனர் என இந்து மதத்தினர் குறித்து எஐஎம்ஐஎம் தலைவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-16 07:44 GMT

லக்னோ,

ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியின் கட்சி அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) ஆகும்.

எஐஎம்ஐஎம் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சவுகந்த் அலி நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, இந்து மதத்தினர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு 3 பெண்களுடன் கள்ள உறவு வைத்துள்ளனர் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சவுகந்த் அலி கூறியதாவது:-

நாங்கள் (இஸ்லாமிய மதத்தினர்) 3 திருமணம் செய்கிறோம் என்று மக்கள் கூறுகின்றனர். நாங்கள் 2 திருமணம் செய்துகொண்டாலும் நாங்கள் 2 மனைவிகளுக்கும் சமுதாயத்தில் மதிப்பு அளிக்கிறோம். ஆனால், நீங்கள் (இந்து மதத்தினர்) ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு 3 பெண்களுடன் கள்ள உறவு வைத்துள்ளீர்கள். நீங்கள் உங்கள் மனைவியையும் மதிக்கவில்லை கள்ள உறவு வைத்துள்ள பெண்களையும் மதிக்கவில்லை. ஆனால், நாங்கள் 2 திருமணம் செய்தாலும், நாங்கள் அவர்களை மரியாதையுடன் நடத்துவோம். எங்கள் குழந்தைகளின் பெயர்களையும் ரேஷன் அட்டையில் சேர்த்துள்ளோம்' என்றார்.

மதரீதியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சவுகந்த் அலி மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்