"நாங்கள் சொன்னதை செய்வோம்" - விவசாய கடன் தள்ளுபடி குறித்து ராகுல் காந்தி பேச்சு

தேர்தல் வாக்குறுதியின்டி ராஜஸ்தானில் 22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.;

Update: 2022-12-07 17:18 GMT

Image Courtesy : @INCIndia  twitter

ஜெய்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 'இந்திய ஒற்றுமை யாத்திரை' நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். பல மாநிலங்களில் சுமார் 2,400 கி.மீ. தூரத்தைக் கடந்து தற்போது 91-வது நாளாக ராஜஸ்தானில் அவரது நடைபயணம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

அதன்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியின்டி, அங்கு 22 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே போல் ராஜஸ்தானில் 8 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு தேசிய அங்கீகாரம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தும் அதனை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அந்த திட்டத்தினை மாநில அரசு தனது சொந்த நிதியில் செயல்படுத்த திட்டமிட்டபோதும், மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்