உலகின் மிகப்பெரிய தேர்தல் இது - ஜெர்மன் தூதர் புகழாரம்

21 மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்கிறது.;

Update:2024-04-15 21:44 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு, வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

ஜூன் 1-ந் தேதி, 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்பிறகு ஜூன் 4-ந் தேதி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மேன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது. இதை காண ஆவலாக இருக்கிறேன். வாக்குப்பதிவு 19-ம் தேதிஆரம்பமாகிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளை ஜூன் முதல் வாரத்தில் அறிய ஆவலுடன் உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்