பால் தாக்கரே கொள்கைகளின் உண்மையான ஜோதி நாங்கள் தான் - ஏக்நாத் ஷிண்டே

பால் தாக்கரேவின் கொள்கைகளின் உண்மையான ஜோதி நாங்கள் தான் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-21 18:51 GMT

புதுடெல்லி,

மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-

"நாங்கள் துரோகிகள் என அழைக்கப்படுகிறோம். ஆனால், பாலாசாகேப்பின் லட்சியங்களை நாம் தான் முன்னோக்கி எடுத்து செல்கிறோம், அவர்கள் இந்துத்துவாவின் லட்சியங்களை சுருக்கிவிட்டார்கள். யார் துரோகி , யார் சுயமரியாதை உள்ளவர்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

சிவசேனா ஒரு தனியார் கம்பெனி அல்ல. பாலாசாகேப் தாக்கரேவுடன் இணைந்து வியர்வையையும் ரத்தத்தையும் கொடுத்து கட்சியைக் கட்டியுள்ளோம். இது உங்கள் சொத்து அல்ல. கட்சித் தொண்டர்களை உங்கள் வேலைக்காரராக நினைத்தால், அவர்கள் உங்களைப் புறக்கணித்துவிடுவார்கள்.

பீகாரில் நிதிஷ் குமார் கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருந்தாலும் அவரை முதல்-மந்தியாக்கினோம் என பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா என்னிடம் கூறினார்கள். மராட்டியத்திலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றினர்.

எங்கள் அரசு அமைந்து 2 மாதங்கள் ஆகிறது, 2 ஆண்டுகளில் எடுக்காத முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். வேதாந்தா நிறுவனம் மராட்டியத்திற்கு வரும். இது குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசி உள்ளேன். இதற்கு முன்பு இருந்த அரசாங்களால் பல நிறுவனங்கள் மாநிலத்தை விட்டு வெளியேறியது." இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்