நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் அங்கம் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுதந்திர தின வாழ்த்து

சுதந்திர தின விழாவினையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார்.

Update: 2023-08-14 13:56 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் 76வது சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு காணாலி காட்சி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். எல்லா இடங்களிலும் திருவிழா சூழலை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் தனி நபர்கள் அல்ல மிகப்பெரிய சமூகத்தின் அங்கம் என்பதை சுதந்திர தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த சமூகம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்களை கொண்டது. ஜாதி, மதம், மொழி, மாநிலம் ஆகியவற்றை கடந்து நமக்கெல்லாம் ஒரு அடையாளம் உள்ளது. காந்தி உள்ளிட்டோர் நாட்டின் ஆன்மாவை மீண்டும் எழுப்பியதோடு நமது மிகப்பெரிய நாகரிகத்தை எடுத்துரைத்தனர்.

சரோஜினி நாயுடு, ரமாதேவி ஆகியோர் பெண்களுக்கு சிறந்த முன் உதாரணம். மகளிர் அதிகாரத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்