4-வது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு உத்தரவாதம் இல்லை; ஆனால்... கிண்டலடித்த மத்திய மந்திரி

மராட்டியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, நிச்சயம் உத்தரவாதம் தரக்கூடிய விசயம் என்னவென்றால், ராம்தாஸ் அத்வாலே மந்திரியாகி விடுவார் என குறிப்பிட்டார்.

Update: 2024-09-23 15:30 GMT

நாக்பூர்,

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். விழா மேடையில் சக மந்திரியான ராம்தாஸ் அத்வாலேவும் காணப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய கட்காரி, பல அரசாங்கங்கள் வந்தபோதும் அதில் அத்வாலே மந்திரியாக இடம் பிடித்து விடும் திறமை பெற்றவராக இருக்கிறார் என கூறி அவரை சீண்டினார்.

இதுபற்றி கட்காரி பேசும்போது, நாங்கள் 4-வது முறையாக ஆட்சிக்கு வருவோம் என்பதற்கு உத்தரவாதம் கூற முடியாது. ஆனால், நிச்சயம் உத்தரவாதம் தரக்கூடிய விசயம் என்னவென்றால், ராம்தாஸ் அத்வாலே மந்திரியாகி விடுவார் என குறிப்பிட்டார். இப்படி கூறி விட்டு, நகைச்சுவைக்காக இதனை கூறினேன் என்றார்.

இந்திய குடியரசு கட்சியின் தலைவரான ராம்தாஸ் அத்வாலே 3 முறை மந்திரியாக பதவி வகித்திருக்கிறார். மராட்டியத்தில், பா.ஜ.க., முதல்-மந்திரி ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளடக்கிய மகாயுதி கூட்டணியில் அத்வாலேவின் கட்சியும் இடம் பெற்றுள்ளது.

எனினும், மகாயுதி கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சேர்ந்துள்ள சூழலில், மாநில அளவில் உறுதியளிக்கப்பட்ட மந்திரி பதவிகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் இந்த வாரம் பேசும்போது கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்