வயநாடு தொகுதி எம்.பி. பதவி: ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதம் ஏற்பு

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி நேற்று முறைப்படி ராஜினாமா செய்தார்.

Update: 2024-06-18 20:17 GMT

புதுடெல்லி,

மக்களவை தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏதாவது ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் ராகுல் காந்தி அறிவித்தார். மேலும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி நேற்று முறைப்படி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக மக்களவை செயலகம் தெரிவித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்