டெல்லியில் திறக்கப்பட்ட யோகா குரு ராம்தேவின் மெழுகு சிலை
ராம்தேவின் மெழுகு சிலை உருவம், ஆன்மீக ஞானம் மற்றும் ஆரோக்கியத்தின் இணக்கமான கலவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
யோகா குரு ராம்தேவின் உருவ அளவிலான மெழுகு சிலை, மேடம் துசாட்ஸ் நியூயார்க்கால் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. ராம்தேவ் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது, அவர் இந்த நிகழ்வில் சில 'ஆசனங்களையும்' செய்து காண்பித்தார்.
இதுதொடர்பாக மெர்லின் எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "யோகா குரு ராம்தேவின் மெழுகு சிலையின் திறப்பு அவரது பார்வையாளர்களுக்கு ஒரு பரிசாகவும், மில்லியன் கணக்கானவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் யோகிக்கு ஒரு மரியாதை செலுத்தும் விதமாகவும் செயல்படுகிறது, இது நிகழ்காலத்தில் அவரைப் பின்பற்றுபவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது மற்றும் எதிர்காலத்தை வெளிப்படுத்துகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேடம் டுசாட்ஸ் நியூயார்க், செய்தித் தொடர்பாளர் தியாகோ மொகோடோரோ கூறுகையில், "ராம்தேவின் உருவம் "ஆன்மீக ஞானம் மற்றும் ஆரோக்கியத்தின் இணக்கமான கலவையாகும், உலகம் முழுவதும் அவர் செலுத்தும் அபிமானத்தையும், மரியாதையையும் இது பிரதிபலிக்கிறது" என்றார்