டெல்லியில் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் இரவில் மழையும் மாறி மாறி பெய்து வந்தது. ஜூலை 12ஆம் தேதி வரை கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருந்தது. இன்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது.
மின்டோ பிரிட்ஜ், மஜ்னு திலா, லுட்யன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது டெல்லி முழுவதும் உள்ள சுரங்கப் பாதைகளில் வாகனங்களை நிறுத்தி போலீசார் கண்காணித்து வரும் நிலையில், தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.