முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது - முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 152 அடி ஆகும்.;
தேக்கடி,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரம் 152 அடி ஆகும். இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழக நீர்வளத்துறை சார்பாக கேரளாவிற்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதில் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு, உப்புத்தரா ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 7,088 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 2,023 கன அடியாக உள்ளது.