நீரில் மூழ்காமல் நடந்து செல்லும் பல்லி - வைரலாகும் வீடியோ

தண்ணீரில் மூழ்காமல் நடந்து செல்லும் பல்லி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Update: 2022-12-02 07:18 GMT

இயற்கை எப்போதுமே ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்தது. சூரியனையும் நட்சத்திரங்களையும் பயன்படுத்தி புலம்பெயரும் பறவைகள் முதல் அகச்சிவப்பு கதிர்வீச்சைக் கண்டறியும் பாம்புகள் வரை, மேம்பட்ட அறிவியலைப் பயன்படுத்தி உயிர்வாழும் இயற்கை உயிரினங்கள் எப்போதுமே நம்முடைய மனதைக் கவரும் வகையில் உள்ளது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு உயிரினத்தின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊர்வன இனத்தைச் சேர்ந்த 'இயேசு பல்லி' அல்லது பசிலிஸ்க் பல்லி என்று அழைக்கப்படும் பல்லி ஒன்று தண்ணீரில் நடக்கும் வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வைரலாகும் இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி, சுசாந்தா நந்தா என்பவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நீர்நிலையின் நடுவில் உள்ள கிளை ஒன்றில் உள்ள பசிலிஸ்க் பல்லி, தண்ணீரில் குதிக்கிறது. தொடர்ந்து வேகமாக தண்ணீரில் நடந்த அந்த பல்லி, கரையை அடையும் வரை மூழ்காமல் சென்றுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சுசாந்தா, நீர் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் போது உருவாகும் மேற்பரப்பு இழுவிசையின் காரணமாக சிறிய விலங்குகள் தண்ணீரில் மூழ்காமல் நடக்க முடிகிறது என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்