ஓடும் காரின் மேல் அமர்ந்து மது அருந்திய நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்.!
குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஓடும் காரின் மேல் பகுதியில் இருவர் அமர்ந்துகொண்டு மது அருவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை பகிர்ந்த இணையவாசிகள், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இந்த நிலையில், வீடியோவைப் பார்த்த காசியாபாத் போலீசார், அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.