'உன்னிடம் பேசமாட்டேன்' கோபப்பட்ட ஆசிரியை...முத்தம் கொடுத்து சமாதானபடுத்திய பள்ளிச்சிறுவன் - வைரல் வீடியோ

கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்தான்.

Update: 2022-09-14 03:50 GMT

புதுடெல்லி,

கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியை கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே சென்ற மாணவன் மனிப்பு கோரியதுடன் தான் இதுபோன்ற தவறை இனி மீண்டும் செய்யமாட்டேன் என கூறி ஆசிரியையுன் கன்னத்தில் முத்தமிட்டு அவரை சமாதான படுத்த முயற்சிக்கிறான்.

வகுப்பறைக்குள் ஆசிரியையின் சொல்பேச்சை கேட்காமல் அந்த சிறுவன் இருந்துள்ளார். இதனால், ஆசிரியை உன்னிடம் இனி பேசமாட்டேன் என கூறி கோபமாக வகுப்பறைக்குள் இருந்துள்ளார்.

அப்போது, அந்த மாணவன் கோபமாக உள்ள தனது ஆசிரியையை சமாதான படுத்த முயற்சித்துள்ளார். அதில், இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என நீ பல முறை கூறியுள்ளாய். ஆனால், அதே தவறை மீண்டும் செய்கிறார். நான் உன்னுடன் பேசமாட்டேன் என சிறுவனிடம் கோபமாக ஆசிரியை கூறுகிறார்.

இதைகேட்ட சிறுவன் ஆசிரியையின் கோபத்தை தணிக்க அவரிடம் கெஞ்சி மன்னிப்புகோருகிறார். அவரை சமாதானபடுத்த முயற்சிக்கிறார். தன்னிடம் பேசும்படியும் இனி தவறு செய்யமாட்டேன் என சத்தியம் செய்து ஆசிரியையின் கன்னத்தில் முத்தமிடுகிறான்.

கோபமாக உள்ள ஆசிரியையை பள்ளிச்சிறுவன் சமாதானம் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


 

மேலும் படிக்க... கோடை முகாமின் கடைசி நாள்; பள்ளி மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய ஆசிரியை - வைரல் வீடியோ

Tags:    

மேலும் செய்திகள்