தேசியகவி குவெம்பு பற்றிய பாடம் நீக்கப்பட்டதா?; மந்திரி பி.சி.நாகேஸ் பதில்

தேசியகவி குவெம்பு பற்றிய பாடம் நீக்கப்பட்டதா என்பதற்கு மந்திரி பி.சி.நாகேஸ் பதில் அளித்துள்ளார்.;

Update:2022-06-01 02:46 IST
பி.சி.நாகேஸ்

பெங்களூரு:

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தேசியகவி குவெம்பு குறித்த பாடம் 4-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. பா.ஜனதா அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சகித்து கொள்ள முடியாத காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். பொய்களை எத்தனை முறை கூறினாலும் அது உண்மை ஆகாது.

இவ்வாறு பி.சி.நாகேஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்