எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவியதா? பா.ஜனதா கேள்வி

நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை எதிர்த்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு உத்தவ் சிவசேனா உதவி யதா? என பா.ஜனதா தலைவர் ஆசிஷ் செலார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-07-29 23:53 GMT

சுத்திகரிப்பு ஆலை

முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கடலோர ரத்னகிரி மாவட்டம் நானார் கிராமத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிட்டப்பட்டது. ஆனால் அப்போது கூட்டணியில் இருந்த ஒன்றுபட்ட சிவசேனா கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உருவாக்க பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனங்கள் சவுதி அரேபியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதுகுறித்து தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பா.ஜனதா கட்சியின் மும்பை பிரிவு தலைவர் ஆசிஷ் செலார் கூறியதாவது:-

இந்தியாவுக்கு நஷ்டம்

நானார் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தியா, கொங்கன் மற்றும் மராட்டியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு இந்த திட்டம் கிடைக்காமல் போவதற்கு உறுதி செய்ய உழைக்கும் சர்வதேச சக்திகள் நானார் போராட்டத்திற்கு பின்னால் உள்ளதா? போராட்டக்காரர்கள் தேச விரோத சக்திகளுடன் கைகோர்த்து செயல்பட்டனரா?

நானார் திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி பாகிஸ்தானுக்கு உதவி புரிகிறதா? ரத்னகிரி மாவட்டத்தில் நானாரில் வரவிருந்த சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை பாகிஸ்தான் கைப்பற்ற முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்