வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உதவி மையம்

வாக்காளர் பட்டியல் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உதவி மையத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.;

Update: 2022-08-29 22:24 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு மாநகராட்சியில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 25-ந் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் வார்டு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அதுபற்றி புகார் தெரிவிக்கலாம் என்று கேட்டு கொள்ளப்பட்டது. வாக்காளர்கள் யாருக்காவது ஆட்சேபனைகள் இருந்தால் அதுபற்றி 1533 என்ற எண்ணில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திலோ அல்லது மாநகராட்சியின் செல்போன் செயலியிலோ தெரிவிக்கலாம்.

இவ்வாறு துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்