தீக்குளித்து விருப்ப ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தற்கொலை

குடகில் தீக்குளித்து விருப்ப ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-16 20:33 GMT

குடகு:

குடகு மாவட்டம் குஷால் நகரை சேர்ந்தவர் சிவண்ணா(வயது 30). இவர் சுண்டிகொப்பாா அரசு அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் சிறுநீரக கோளாறு, நீரிழிவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை ெபற்று வந்தார். இருப்பினும் அவரது உடல் நலம் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை சிவண்ணா தனது காரில் மைசூரு அருகே பாபுஜிநகரில் உள்ள ஹரி வித்யாலயா பள்ளி முன்பு வந்துள்ளார்.

அங்கு காரை நிறுத்திய அவர் திடீரென்று காரில் இருந்தபடி தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனால் உடலில் தீப்பிடித்து அவர் கார் கதவை திறந்துகொண்டு அலறியடிபடி வந்தார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவரது உடலில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுதொடர்பாக சரஸ்வதிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்