மனதின் குரல் நிகழ்ச்சி: உத்திரமேரூர் கல்வெட்டு குறித்து புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி, தமிழகத்தின் உத்திரமேரூர் குறித்தும், அங்குள்ள பழமையான கல்வெட்டுகள் குறித்தும் பேசினார்.

Update: 2023-01-29 10:20 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து, 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிரதமரான பின்பும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. அதன்படி, பிரதமர் மோடியின் வானொலி வழியேயான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி என்ற பெருமையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழகத்தின் உத்தரமேரூர் குறித்தும், அங்குள்ள பழமையான கல்வெட்டுகள் குறித்தும் பேசினார்.

உத்திரமேரூர் கல்வெட்டுகள் குறித்து அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டின் ஒரு சிறிய, ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் கிராமம் உத்திரமேரூர். இங்கே, 1100-1200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு, உலகத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது.

கிராம சபையானது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை என்ன என்பன குறித்தும் அதில் இடம்பெற்றுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்