விசாகப்பட்டினம்: மீன்பிடித் துறைமுகக் கடற்கரையில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் அலையில் சிக்கி உயிரிழப்பு

விசாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகக் கடற்கரையில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

Update: 2023-05-13 20:34 GMT

விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுக கடற்கரையில் நேற்று குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக நேற்று மாலை 4 மணியளவில், கங்கம்மா தளி கோவில் அருகே மீன்பிடி துறைமுக கடற்கரையில் மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென கடற்கரையில் ஏற்பட்ட பெரிய அலையில் இரண்டு சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் தலாய் இஷாந்த் (வயது 14) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சத்ய ஷியாம குமார் (வயது 15) என்ற சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்