சபரிமலையில் அத்துமீறி பூஜை: வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

சபரிமலையில் அத்துமீறி பூஜை செய்த விவகாரத்தில் வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-05-25 17:37 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலையில் அத்துமீறி பூஜை செய்த விவகாரத்தில் வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளார். இதனையடுத்து, கைதானவர்கள் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்தது. பொன்னம்பலமேட்டில் சிலர் அத்து மீறி நுழைந்து பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக வனத்துறையும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாராயணசாமி என்பவரது தலைமையில் 6 பேர் பூஜை நடத்தியது தெரிய வந்தது.

இது தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கே.எஃப்.டி.சி காலனியைச் சேர்ந்த ஈசன் என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்பொழுது வரை நாராயணசாமி தலைமறைவாக உள்ள நிலையில், நாராயணசாமி சார்பாக முன் ஜாமீன் கேட்டு பத்தனம்திட்டா செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த கேரள ஐகோர்ட்டு, வனத்துறையும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்