பிரவீன் இறுதி ஊர்வலத்தில் வன்முறை; கடைகள், வாகனங்களை சேதப்படுத்தியதாக போலீசில் புகார்
பிரவீன் இறுதி ஊர்வலத்தில் வன்முறையால் கடைகள், வாகனங்களை சேதப்படுத்தியதாக அதன் உாிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகர். இவரை கடந்த 26-ந்தேதி மர்மநபர்கள் படுகொலை செய்தனர்.
இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், பிரவீன் நெட்டார் இறுதி ஊர்வலத்தின்போது அந்தப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது. அப்போது, வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கடைகள், வாகனங்களை அடித்து நொறுக்கியதாக அதன் உரிமையாளர்கள் சுப்பிரமணியா போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.