வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை அளிக்கப்படும் - அரியானா அரசு

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரராகவே வினேஷ் போகத்தை கருதுவோம் என்று அரியானா அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-08-08 02:57 GMT

சண்டிகார்,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப் பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் பதக்க கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயங்களும் நொறுங்கி போயின. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், இனி என்னிடம் போராட சக்தியில்லை எனவும் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். வினேஷ் போகத்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதனிடையே, வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை அளிக்கப்படும் என்று அரியனா அரசு அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போலவே வினேஷ் போகத் வரவேற்கப்படுவார்.வெள்ளிப்பதக்கம் வென்றதற்கான வெகுமதி, மரியாதை, வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் என அரியானா அரசு தெரிவித்து இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்