காருக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பஞ்சாயத்து தலைவர் - அதிர்ச்சி சம்பவம்

பஞ்சாயத்து தலைவர் காருக்குள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-07 22:15 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரதப்காட் மாவட்டம் தியா ஜலால்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் கருணேஷ் சிங் (34). இவரது கார் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் நின்றுகொண்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அங்கு சென்றனர். காருக்குள் பஞ்சாயத்து தலைவர் கருணேஷ் சிங் கழுத்து அறுக்கப்பட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காருக்குள் பிணமாக கிடந்த பஞ்சாயத்து தலைவர் கருணேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்து தலைவரை கடத்தி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்