3 நாட்கள் பயணமாக கம்போடியா சென்றார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் 3 நாட்கள் பயணமாக கம்போடியா சென்றுள்ளார்.;

Update: 2022-11-11 19:11 GMT

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், 3 நாள் பயணமாக நேற்று கம்போடியாவுக்கு சென்றார். துணை ஜனாதிபதி ஆன பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். அவருடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும் சென்றுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ஆசியான்) தலைவர் என்ற முறையில், இன்று ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டை கம்போடியா நடத்துகிறது. அதில், ஜெகதீப் தன்கர் கலந்து கொள்கிறார். இருதரப்பு இடையிலான பாதுகாப்பு உறவின் நிலவரம் குறித்தும், வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார். மேலும், கம்போடிய பிரதமர் ஹன் சென் மற்றும் இதர நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்