தெற்கு கடற்படை கமாண்ட் தலைவராக வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றார்

வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார்.

Update: 2023-12-31 18:36 GMT

கொச்சி,

கொச்சி கடற்படைத் தளத்தில் இன்று (டிசம்பர் 31, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு கடற்படை கட்டளையின் (கமாண்ட்) 30 வது தலைவராக வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் பொறுப்பேற்றார். இந்திய கடற்படையில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்ற வைஸ் அட்மிரல் எம்.ஏ.ஹம்பிஹோலி ஓய்வு பெறுவதை அடுத்து வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். 01 ஜூலை 1987 அன்று இந்திய கடற்படையில் அவர் இணைந்தார். நீர்மூழ்கி எதிர்ப்பு போர் நிபுணரான இவர் முன்னணி நீர்மூழ்கிக் கப்பல்களான ஐ.என்.எஸ் ஷால்கி, ஐ.என்.எஸ் சிசுமர் மற்றும் ஐ.என்.எஸ் ஷாங்குல் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

தமது 36 ஆண்டுகால அனுபவத்தில், ஐ.என்.எஸ் ஷாங்குல், ஐ.என்.எஸ் ரன்வீர் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ் சக்ரா ஆகியவற்றிற்கு தலைமை வகித்துள்ளார். இவரது நீண்ட அனுபவத்தில் பல்வேறு பதக்கங்கள் மற்றும் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்