வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க போலீசார் வேண்டுகோள்

பிரதமர் வருகையால் பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-11-10 21:52 GMT

பெங்களூரு:

பிரதமர் வருகையால் பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வாகனங்கள் செல்ல தடை

பிரதமர் நரேந்திர மோடி நாளை(அதாவது இன்று) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை திறப்பு விழா, பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்தில் வந்தேபாரத் ரெயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் வருகை காரணமாக பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் மாற்று சாலைகளில் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் மாற்று சாலைகளில் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

குறிப்பாக ரேஸ் கோர்ஸ் ரோடு, பேலஸ் ரோடு, சாங்கி ரோடு, சேஷாத்திரிபுரம் சாலை, சிட்டி ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள், பெங்களூரு விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இந்த தடை அமலில் இருக்கும்.

எனவே வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட சாலைகளுக்கு பதிலாக மாற்று சாலைகளை பயன்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் வருகையையொட்டி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்