உத்தரகாண்ட் - மண் சாிந்து விழுந்து விபத்து - பெண் உயிாிழப்பு

உத்தரகாசி மாவட்டத்தில் மண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண் சாிந்து விழுந்ததில் பெண் ஒருவா் பாிதாபமாக உயிாிழந்து உள்ளாா்.

Update: 2022-06-22 15:40 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிடாாி கிராமத்தில் பெண்கள் சிலா் மண் தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக மண் சாிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த மண்சாிவில் 5 பெண்கள் சிக்கிக்கொண்டனா்.

இதனையடுத்து, மண்ணுக்குள் சிக்கியிருந்த பெண்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மோாி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்தனா்.

இதில் சூரி தேவி என்ற பெண் ஆஸ்பத்திாிக்கு செல்லும் வழியிலேயே பாிதாபமாக உயிாிழந்தாா்.

மேலும், விபினா என்ற பெண் பலத்த காயம் அடைந்துள்ளாா். கஸ்தூரி, சுசீலா ,ராஜேந்திரி ஆகியோர் லேசான காயங்களுடன் உயிா் தப்பியுள்ளனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போாிடா் மீட்பு படையினா் மற்றும் வருவாய் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா்.இந்த சம்பவம் குறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்