உத்தரகாண்ட் மின்மாற்றி வெடித்து சிதறி 10 ஊழியர்கள் பலி
உத்தரகாண்ட் சாமோலி மாவடடத்தில் உள்ள நமாமி கங்கை திட்ட தளத்தில் மின்மாற்றி வெடித்து சிதறி 10 பேர் பலியானார்கள்
சமோலி
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்ட தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை இங்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது மின்மாற்றி வெடித்து சிதறியது இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இதில் பலர் மின்சாரம் பாய்ந்து பலியானார்கள் மேலும் பலர் காயமடைந்து உள்ளனர்.
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமோலி போலீஸ் சூப்பிரெண்டு பர்மேந்திர தோவல் தெரிவித்துள்ளார்.