உத்தரகாண்ட் முதல்-மந்திரியின் பாதுகாவலர் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணம்; தீவிர விசாரணை

உத்தரகாண்ட் முதல்-மந்திரியின் பாதுகாவலர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் மரணம் அடைந்து உள்ளார்.

Update: 2023-06-01 16:51 GMT

டேராடூன்,

உத்தரகாண்டின் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமிக்கு கமாண்டோ படை பாதுகாவலராக இருந்து வந்தவர் பிரமோத் ராவத்.

இந்த நிலையில், டேராடூன் நகரில் பணியில் இருந்தபோது, ராவத் தனது பணிக்கான பயன்பாட்டுக்காக வைத்திருந்த ஏ.கே.-47 ரக துப்பாக்கியில் இருந்து, திடீரென குண்டு பாய்ந்து உள்ளது.

இதில், அவரது கழுத்து பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு மூத்த அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் குழுவினர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் பற்றி முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் அபினவ் குமார் கூறும்போது, கமாண்டோ வீரர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்செயலாக துப்பாக்கி சுட்டு உயிரிழந்து உள்ளாரா? என தெளிவாக தெரிய வரவில்லை.

கமாண்டோ வீரரின் கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டு காயம் உள்ளது. ஆனால், துப்பாக்கி குண்டு வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை.

அதனால், சம்பவத்திற்கான காரணம் பற்றி தடய அறிவியல் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்