சொகுசு விடுதி இளம் பெண் வரவேற்பாளரை கால்வாயில் தள்ளி கொன்ற பாஜக தலைவரின் மகன்
19 வயதான இளம் இளம் பெண் சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
டெராடூன்,
உத்தரகாண்ட் மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யா. இவர் அம்மாநில மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா.
அம்மாநிலத்தின் பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகே புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான சொகுசு விடுதி உள்ளது. 'வனந்த்ரா' என்ற அந்த சொகுசு விடுதியில் 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, சொகுசு விடுதியில் பணியாற்றிவந்த அங்கிதா கடந்த 18-ம் தேதி பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து மகள் காணவில்லை அங்கிதாவின் தந்தையும், தனது விடுதியில் பணிபுரிந்த பெண் அங்கிதாவை காணவில்லை என சொகுசு விடுதி உரிமையாளர் புல்கிட் ஆர்யாவும் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தல் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், இளம் பெண் வரவேற்பாளர் அங்கிதாவை சொகுசு விடுதி உரிமையாளரான பாஜக தலைவரின் மகன் புல்கிட் ஆர்யாவை கால்வாயில் தள்ளி கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.
வரவேற்பாளர் அங்கிதாவை சொகுசு விடுதி உரிமையாளர் புல்கிட் ஆர்யா, விடுதி மேலாளர் சுபாஷ் பாஸ்கர் மற்றும் விடுதி துணை மேலாளர் அங்கித் குப்தா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அதேவேளை தனது மகளுக்கு விடுதி உரிமையாளரான புல்கிட் ஆர்யா பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளதாக அங்கிதாவின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக தலைவரின் மகனான சொகுசு விடுதி உரிமையாளர் புல்கிட் ஆர்யாவால் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட இளம் பெண் வரவேற்பாளர் அங்கிதா பண்டாரியின் உடலை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான 'வனந்த்ரா' சொகுசு விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என கூறி அந்த சொகுசு விடுதி இடிக்கப்பட்டது.
சொகுசு விடுதியில் பணியாற்றிவந்த இளம்பெண் வரவேற்பாளரை பாஜக தலைவரின் மகன் கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.