இளைஞர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளித்த ஐ.எஸ். பயங்கரவாதி கைது

இளைஞர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளித்த ஐ.எஸ். பயங்கரவாதியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.;

Update: 2022-10-20 20:15 GMT

கோப்புப்படம்

லக்னோ,

இந்தியாவுக்கு எதிரான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கடந்த ஆண்டு ஜூன் மாதம், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்திருந்தது.

விசாரணையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த பசிட் கலாம் சித்திக் (வயது 24) என்பவன், ஐ.எஸ். அமைப்பு சார்பில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்த்து வருவது தெரியவந்தது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக அந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தள குழுக்கள் மூலம் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்து வந்துள்ளான்.

ஐ.எஸ்.க்கு ஆதரவாக கட்டுரைகளை உருவாக்கி, 'வாய்ஸ் ஆப் குராசன்' என்ற பத்திரிகையில் பிரசாரம் செய்து வந்தான். இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் வாரணாசி, டெல்லி ஆகிய நகரங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பசிட் கலாம் சித்திக்கை கைது செய்தனர். செல்போன், லேப்டாப், பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்