உத்தர பிரதேசம்: மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-04 16:32 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சவுக் பகுதியைச் சேர்ந்த உக்ராசென் என்ற நபர், கடந்த 2021-ம் ஆண்டு மே 29-ந்தேதி, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மைனர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் உக்ராசென் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதன்படி 2021-ம் ஆண்டு மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக உக்ராசென்னுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.9,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், தண்டனைக்காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்