உத்தர பிரதேசம்: குடியிருப்பு வளாக எல்லை சுவர் இடிந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் குடியிருப்பு வளாகத்தின் எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-09-20 09:09 GMT


நொய்டா,



உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பிரிவு 21-ல் ஜல வாயு விகார் சொசைட்டி என்ற பெயரில் குடியிருப்பு வளாகம் ஒன்று அமைந்து உள்ளது. இந்த வளாகத்திற்கு என்று தனியாக எல்லை சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

அதனை ஒட்டி அமைந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி இன்று காலை நடந்தது. இந்த பணியில் நொய்டா நிர்வாகம் ஈடுபட்டு இருந்தது. ஏறக்குறைய 13 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பணி நடந்து கொண்டிருந்தபோதே, திடீரென்று அதனருகே இருந்த எல்லை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். சம்பவம் பற்றி அறிந்ததும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர்.

தொழிலாளர்கள் 9 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்து கொண்டார்.

உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை தொடரும்படி மூத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்