இந்தியா அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க தூதரக அதிகாரி எலி ராட்னர் டெல்லி பயணம்!

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகார உதவிச் செயலர் எலி ராட்னர் இந்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Update: 2022-09-06 04:46 GMT

வாஷிங்டன்,

இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத் துறை இடையே வெளியுறவு, பாதுகாப்புத் துறைகளில் இருநாட்டு உறவை பலப்படுத்தவும், புதிய ஒப்பந்தகளை மேற்கொள்ளவும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது, 2+2 பேச்சுவார்த்தை என்றும் அழைக்கப்படுகிறது.

6 வது கட்ட 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் 7ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டிய அம்சங்கள், ஒப்பந்தங்களை பற்றி முன்கூட்டியே ஆலோசித்து இறுதிநிலையை எட்டுவதற்காக, இருநாட்டு அதிகாரிகள், பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது.

கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை டெல்லியில் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. இவற்றில் பங்கேற்க இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலர் எலி ராட்னர் இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவு துணை மந்திரி டொனால்டு லூவும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான பாதுகாப்பு அமைச்சக துணை மந்திரி கெமிலி டாவ்சனும் பங்கேற்கின்றனர். தடையற்ற கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்